'வண்டிய விடுறா சைனாவுக்கு' ... தயாரான 18 மூலிகை கொண்ட மருந்து... கொரோனாவுக்கே சவால் விடும் ஏலியன் சித்தர் !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Feb 27, 2020 06:24 PM

சீன நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸிடம் இருந்து காத்துக் கொள்ள 18 மூலிகைகள் கொண்ட மருந்து ஒன்றை கண்டுபிடித்ததாக ஏலியன் சித்தர் சிங்க பெருமாள் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை சென்னையில் நடத்தியது சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு இடமாகியுள்ளது.

Chennai based Siddhar found medicine for Corona Virus

சீன நாட்டில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மிக வேகமாக பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகும் என உலக சுகாதார மையம் அறிவித்திருந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஏலியன் சித்தர் என அழைக்கப்படும் சிங்க பெருமாள் 18 வகை மூலிகைகளை கொண்டு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

காளஹஸ்திக்கு தான் சென்ற போது மூன்றாம் ஞானக்கண் திறந்ததாகவும் அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவ ராகு மற்றும் கேது தான் காரணம் என தான் கண்டறிந்ததாகவும் ஏலியன் சித்தர் கூறினார். மேலும் கொரோனா பெயரைக் கொண்டு எண் கணித ராசிப்படி 18 மூலிகைகளை கொண்டு மருந்து ஒன்றை தான் கண்டுபிடித்ததாகவும், அரசு அதிகாரிகளிடம் இதை குறித்து தெரிவிப்பதை விட மீடியாவில்  தெரிவித்தால் வேகமாக உலகிலுள்ள மக்களிடம் சென்றடையும் என்றார்.

உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தால் அஞ்சியுள்ள நிலையில், இது போன்ற செய்திகள் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #ALIEN SIDDHAR #CHENNAI #PRESS MEET #CORONA VIRUS #CHINA