'ப்ளீஸ் அவர் கூட டேட்டிங் போகாதீங்க...' என்ன பத்தி எல்லாமே இந்த 'ரெஸ்யூம்'ல இருக்கு...! என்னோட 'தகுதிகள்' என்னெல்லாம் தெரியுமா...? ரெஸ்யூமை ட்விட்டரில் வெளியிட்ட தோழி...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 01, 2020 11:19 PM

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரெஸ்யூம் மூலம் தன் தோழியை டேட்டிங் அழைத்த இளைஞரின் செயல் சமூகவலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

friend shared resume on twitter sent by a friend to go on dating

கலிஃபோர்னியாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தன் பெண் தோழியை நீண்ட நாட்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். எவ்வளவோ முயற்சி செய்தும் மடங்காத அப்பெண் எனக்கு கடிதம் மூலம் அழைப்பு விடு பிறகு தன் பதிலை சொல்வதாகக் கூறியுள்ளார்

இந்த  சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த அந்த இளைஞர், இன்னும் பல படி மேலே சென்று கடிதம் எழுதாமல் தன்னுடைய சுயவிவரக் குறிப்பினை எழுதி தன் தோழிக்கு அனுப்பியுள்ளார்.

தன்னுடைய சுய விவர குறிப்பில், தன்னுடன் டேட்டிங் வருவதற்கான அழைப்பையும், அதற்குண்டான அவருடைய தகுதிகளையும், திறமைகளையும் இணைத்து அனுப்பியுள்ளார். மேலும் இணைப்பாக, தான் இதற்கு முன் டேட்டிங் செய்த அவருடைய பெண் தோழிகளின் பெயர்களை குறிப்பிட்டு தன்னை பற்றி விசாரித்து விட்டு முடிவை சொல்லுமாறு குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு அம்மா தான் மிகவும் பிடிக்கும் என்றும் உங்களையும் என் அம்மாவை நேசிப்பதை போல  அதிகமாக நேசிப்பேன் என்றும் குறிப்பிட்டு பெண்களின் மனதை கவர்ந்துள்ளார். மேலும் தனக்கு காமெடி செய்வது கைவந்த கலை என்றும்  குறிப்பிட்டு, அவருடைய பெண் தோழி டேட்டிங் வந்தால் அந்த நாள் முழுக்க சிரிக்க வைப்பேன் என்றும் சொல்லியுள்ளார். 

இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அந்த பெண், அதனை அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இதை பார்த்த நண்பர்கள் பலர் "தயவு செய்து அவருடன் டேட்டிங் போகாதீர்கள்" என கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் சில நண்பர்கள் அவருடன் டேட்டிங் செய்யுமாறும், ஒரு சிலர் அந்த இளைஞனை திட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

 

Tags : #DATING