கோவை இன்ஜினியர் கொலையில்... புதிய 'டுவிஸ்ட்'... மனைவியுடன் பழகியதால்... 'பெட்ரோல்' ஊற்றி கொலை செய்த கணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 24, 2019 12:35 AM

கோவை இன்ஜினியர் கொலை விவகாரத்தில் மனைவியுடன் நெருங்கி பழகியதால் கணவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

civil engineer murder case police arrested one person

கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை சேர்ந்த சக்திவேல்(42) என்னும் இன்ஜினியர் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் இதுதொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியாகியுள்ளன.

சக்திவேல், அதே பகுதியை சேர்ந்த அழகுமணி என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. சக்திவேல் வேலை காரணமாக பெங்களூர் சென்று அங்கு தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். பின்னர் மீண்டும் கோவைக்கு வந்த சக்திவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அழகுமணிக்கும், சக்திவேலுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் சக்திவேல் வேறு ஒரு பகுதியில் வீடுபார்த்து குடியேறியுள்ளார். அந்த பெண்ணின் கணவருக்கும் இது தெரியவர அவர் சக்திவேலை கண்டித்ததாக தெரிகிறது. இதற்கிடையில் தன்னுடைய அக்காவுடன் சக்திவேல் நன்றாக பேசிப்பழகி வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சக்திவேலிடம் இருந்து போன் எதுவும் வராததால் அவர் தன்னுடைய மகனிடம் சக்திவேலை சென்று பார்த்து வரும்படி கூறியுள்ளார். அவர் வந்து பார்த்தபோது தான் சக்திவேல் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கிடந்த விவரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் சக்திவேலை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த விவரம் தெரியவந்தது. தற்போது அவரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.