'சென்னை' காவல்நிலையத்தில்... 'கதறியழுத' கல்லூரி மாணவி... அக்கா 'கணவரை' தட்டித்தூக்கிய போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 26, 2019 07:56 PM

அக்கா கணவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் கதறியழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Young Girl files Complaint Against her Sister Husband

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் சரவணன்(44). இவருக்கும் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திவ்யாவின் சகோதரி கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் திவ்யாவின் சகோதரிக்கு போன் செய்த சரவணன் உன் அக்கா குறித்து முக்கியமான தகவல் ஒன்றை சொல்ல வேண்டும். நீ உடனே கிளம்பி வா என அழைத்துள்ளார். இதனை நம்பிய திவ்யாவின் சகோதரி மின்சார ரெயிலில் வில்லிவாக்கம் வந்துள்ளார். அங்கு காத்திருந்த சரவணன் அவரை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு மெரினா சென்றுள்ளார்.

ஏன் மெரினா செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு வீட்டில் உன் அக்கா இருக்கிறாள். அவள் முன்னால் பேச முடியாது என்று கூறியிருக்கிறார். இதனை திவ்யாவின் சகோதரியும் உண்மை என நம்பியிருக்கிறார். ஆனால் நடுவழியிலேயே சரவணனின் செயல்கள் எல்லை மீறி போயுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆட்டோவை நிறுத்துகிறீர்களா? இல்லை குதிக்கவா? என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து வேறொரு ஆட்டோவை பிடித்து அக்கா வீட்டுக்கு வந்த அவர் நடந்ததை கூறி அழுக, இருவரும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு திருமுல்லைவாயல் சென்றுள்ளனர். அங்கு திவ்யாவை தேடிவந்த சரவணன் அவரிடம் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து திவ்யாவின் சகோதரி சரவணன் குறித்து ஆவடி காவல்நிலையத்தில் புகாரளிக்க, போலீசார் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,'' திவ்யா-சரவணன் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் திவ்யா சகோதரிக்கு சரவணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். காவல் நிலையத்திலேயே அந்த பெண் கதறியழுதார்,'' என தெரிவித்து உள்ளனர்.