குழந்தைகளை பார்க்க வந்த தாய்... கணவர் செய்த அதிர்ச்சி காரியம்... மனைவிக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 23, 2019 10:38 AM
சென்னை அருகே உடைந்த பீர் பாட்டிலால், மனைவியை சரமாரியாக கணவரே குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி காமாட்சிக்கு, வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், ஏற்கனவே குமரன் சிறை சென்று பின்னர் வெளியே வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மனைவியிடம் இருந்து விவாகரத்துக்கோரி, அவர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், கணவர் குமரன் பராமரிப்பில் இருக்கும் தனது 3 குழந்தைகளை பார்க்க தாய் காமாட்சி சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குமரன், காமாட்சியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், பீர் பாட்டிலை உடைத்து, காமாட்சியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், ரத்தகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்நிலையில், மனைவியை கொலை செய்ய முயன்ற காரணத்திற்காக குமரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.