'ஷாக்' ரிப்போர்ட்... குழந்தைகளுக்கு எதிரான 'பாலியல்' குற்றங்கள்... 'முதலிடம்' பிடித்த தென் மாநிலங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 27, 2019 12:45 AM

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kerala No 1 in child sex abuse complaints, TN follow

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள 522 நகரங்கள் மற்றும் 100 ரெயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் சமீபத்தில் ஆய்வொன்றை நடத்தியது. இதில் 1742 வழக்குகளுடன் கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 985 வழக்குகளுடன் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் 436 வழக்குகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. உறவினர்கள், ஆசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள், அக்கம் பக்கத்தினர், வளர்ப்பு பெற்றோர் ஆகியோர் தான் குழந்தைகளிடம் அதிகம் தவறாக நடந்து கொள்வதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.