‘கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு... திரும்பிய சென்னை இளம்பெண்... ஸ்கூட்டியில் போனபோது... இளைஞர்களால் நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 27, 2019 11:16 AM

விடுமுறைக்காக ஊருக்குச் சென்ற இளம் பெண்ணை வழிமறித்து, இளைஞர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai young woman harassed by 2 youths in native place

ராமேஸ்வரம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான ரெபினா என்ற இளம்பெண்.  இவர் சென்னையில் உள்ள யூடியூப் சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊரான ராமேஸ்வரம் வந்திருந்தார். பின்னர், நேற்று காலை தனது தம்பியுடன் ஸ்கூட்டியில், புதுரோடு பகுதியிலிருந்து மாந்தோப்பு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, போதையில் இருந்த இளைஞர்கள் இருவர், அந்த இளம்பெண்ணை நோட்டமிட்டு, பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

வேர்காடு பகுதியில் திடீரென அந்த இளம்பெண்ணை இளைஞர்கள் வழிமறித்தனர். ஆனால் அந்த இளம் பெண் நிறுத்தாமல் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பிறகு, அந்த இளம் பெண்ணையும், அவரது தம்பியையும் ஸ்கூட்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். சரமாரியாக இருவரையும் தாக்கிய இளைஞர்கள், கத்தியை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த 3 வசரன் சங்கிலியை பறித்துக்கொண்டது மட்டுமில்லாமல், பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அலறி கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், இளைஞர்கள் 2 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், சிறுவனும் மீட்கப்பட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பிடிபட்ட விஜயகுமார், பரமாத்மா ஆகிய இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை முயற்சி, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #HARASSMENT #YOUNG #WOMAN #YOUTH