'ஆபாச' வீடியோ விவகாரம்... 'கோவையில்' சிக்கிய 40 பேர்... போலீசார் 'அதிரடி' விசாரணை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Dec 31, 2019 02:18 PM
சிறுவர், சிறுமிகள் ஆபாச வீடியோக்களை பார்ப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சுமார் 5000 பேர் கொண்ட பட்டியல் சென்னை குற்றப்பிரிவு போலீசாரால் தயாரிக்கப்பட்டது.

இதில் உள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதில் முக்கிய நடவடிக்கையாக திருச்சியை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து சென்னையில் ஆபாச படம் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள் ஆகியோரை ஐபி அட்ரஸ் வைத்து கண்டறிந்த சென்னை போலீசார் 24 பேர் கொண்ட பட்டியலை தயாரித்து இருப்பதாக தெரிவித்தனர். விரைவில் அவர்கள் அனைவருக்கும் போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சில நாட்களுக்கு 40 பேர் கொண்ட 2-வது பட்டியல் தயார் என்றும் அந்த பட்டியலை சென்னை போலீசாருக்கு அனுப்பி வைத்ததாகவும், குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து இருந்தனர்.
அந்த பட்டியலின் அடிப்படையில் தற்போது கோவையை சேர்ந்த 40 பேரின் ஐபி அட்ரஸை வைத்து அவர்களின் அட்ரஸ் மற்றும் பிற விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்திடவும், போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
