ஆபாச வீடியோ விவகாரம்: '40 பேர்' கொண்ட 2-வது லிஸ்ட் ரெடி... விரைவில் 'கைது' நடவடிக்கை?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 28, 2019 12:29 AM

சிறுவர்-சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பதில் தமிழகம் குறிப்பாக சென்னை முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து மத்திய அரசு அளித்த தகவலின்படி சுமார் 5000 பேர் இந்த வீடியோக்களை பார்த்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Child Pornography : Criminal police sent 40 persons list

தொடர்ந்து திருச்சியில் சிறுவர்-சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை அனுப்பிய இளைஞர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். சில நாட்களுக்கு முன் ஆபாச வீடியோ பார்த்த 30 பேரின் தகவல்கள் சென்னை போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்தார்.

இந்தநிலையில் மீண்டும் 40 பேர் கொண்ட பட்டியல் சென்னை போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர். இதேபோல் வடக்கு மண்டல காவல்துறை ஐஜிக்கு  2 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சம் நிலவி வருகிறது. 

Tags : #POLICE