'போராட்டம் பண்றவங்கள சுட்டுடுவேன்!'.. 'வீசுற கல்ல வெச்சு ராமர் கோயில் கட்டுவேன்'.. பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 30, 2019 04:19 PM

‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராடுபவர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால், அவர்களை சுட்டுவிடுவேன்’ என்று முன்னாள் காவலர் ஒருவர் காவலர் உடையில் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

man talking against protester in police dress video

இதுபற்றி பேசிய அந்த காவலர், ‘நாங்கள் உள்துறை அமைச்சரின் உத்தரவைப் பின்பற்றுகிறோம். அரசியலமைப்பினை காப்பாற்றுகிறோம். எங்கள் மீது வன்முறையை செலுத்தினால், சுட்டுவிடுவேன். எங்கள் மீது கல்லை எறிந்தால் ராமர் கோயில் கட்டப்பயன்படுத்துவோம்’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, டிசிபி ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வீடியோவில் பேசிய ராகேஷ் தியாகி என்பவர் 2014-ல் பணியில் இருந்து முழுமையாக விலகிய முன்னாள் காவலர் என்றும், இவர் தன்னுடைய பழைய சீருடையைக் கூட பயன்படுத்தாமல், போலியான சீருடையையே பயன்படுத்தியதால் அவர் செய்துள்ளது சட்ட விரோதமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் ஜாமினில் விடுவிக்கப்பட்ட பின்னர் பேசிய ராகேஷ் தியாகி, தான் எதையும் தவறாக கூறவில்லை என்றும், இரவு 10 மணிக்கு, தான் கைது செய்யப்பட்டதாகவும் ஆனால் தான் எப்போதும் காவல் துறையை மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #POLICE #CAA #CAB #PROTEST