'வீட்டுக்குள் இருந்த சிறுமி'... 'சட சடவென வந்த மர்ம கும்பல்'... போராடிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 31, 2019 11:11 AM

வீட்டிற்குள் இருந்த சிறுமியை கடந்த முயன்ற போது, சிறுமியின் மூக்கை மர்ம கும்பல் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gurgoan: nable to Kidnap Girl, Men Chop Off Her Nose

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள கிராமம் ஒன்றில், சிறுமி ஒருவர் தனது வீட்டிற்குள் இருந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்டு கும்பல் ஒன்று சிறுமியின் வீட்டிற்குள் திடீரென புகுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத சிறுமியின் சகோதரர், யார் நீங்கள், எதற்காக வீட்டிற்குள் வந்து இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அந்த கும்பல் சிறுமியின் சகோதரரை தாக்கியுள்ளது. அதில் கிழே சரிந்த நேரம் பார்த்து சிறுமியை அந்த கும்பல் கடத்த முயன்றது.

இதையயடுத்து சிறுமி கத்தி கூச்சலிட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வீட்டிற்கு வெளியே கூடினார்கள். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த கும்பல் அவர்களையும் தாக்க முயற்சித்தது. இந்த களோபரத்தில் கும்பலில் இருந்த ஒருவன் திடீரென சிறுமியின் மூக்கை வெட்டினான். இதில் சிறுமி வலியால் கதறி துடித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இந்நிலையில் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதில் கவுரவ் யாதவ், ஆகாஷ் யாதவ், சதீஷ் யாதவ், மோனு யாதவ் மற்றும் லீலு யாதவ் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து தான் சிறுமியை கடத்த முயற்சித்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #KIDNAP GIRL #CHOPS OFF #NOSE #GURGAON