'ஒத்தைக்கு ஒத்தை வரியா?'... 'போதையில்' குளத்துக்குள் சென்று.. போலீஸை வம்பிழுத்த 'பவானி' பிரகாஷ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 27, 2019 07:05 PM

குடித்துவிட்டு, போதையில் போக்குவரத்து பெண் போலீஸாரை கேலி செய்த நபர் செய்த சேட்டை நபர் வைரலாகி வருகிறார்.

Erode drunken man arrested for scolding Traffic police

ஈரோடு மாவட்டம் பவானிக்குட்பட்ட கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த பிரகாஷ்,  குடிபோதையில் போக்குவரத்து பெண் காவலர் ஒருவரை பார்த்து கேலி செய்துள்ளார். உடனே அவரை விசாரிக்க முயன்ற சக காவலர்களிடமும் சட்டையைக் கழற்றி ஒத்தகைக்கு ஒத்தை சண்டைக்கு வருமாறி அழைப்பு விடுத்ததோடு ஆபாசமாகவும் பேசியுள்ளார்.

இதனை ஒரு காவலர் போனில் வீடியோவாக பதிவு செய்தார். அங்கு கூடிய பொதுமக்களும் புத்தி சொல்ல, பவானி பிரகாஷ் அடங்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கு காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது அவர்களைக் கண்டு, குளத்துக்குள் போய் கழுத்துவரை மூழ்கிக் கொண்டு, போலீஸாரை திட்டத் தொடங்கியுள்ளார் பிரகாஷ்.

ஆனால் மேலும் விரட்டினால், ஆழமாக சென்று மூழ்கிவிடுவார் என்று  எண்ணிய போலீஸார், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என திரும்பி சென்றனர். ஆனால், தண்ணீரில் மூழ்கி, அடித்த மது போதை இறங்கி, கரையொதுங்கிய பிரகாஷை, கோழி அமுக்குவது போல் போலீஸார் பிடித்துவிட்டனர்.

அப்போது பிரகாஷோ போதையில் தெரியாமல் பேசிவிட்டதாகச் சொல்லி ஒவ்வொருவரின் காலிலும் விழுந்துள்ளார். எனினும் ஆப்பசைத்த குரங்காக சிக்கிக் கொண்ட பவானி பிரகாஷ் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Tags : #POLICE #TRAFFICCOP #BAVANI PRAKASH