தூங்கிக்கொண்டிருந்த 'அண்ணன்' வீட்டிற்கு... 'நள்ளிரவில்' தீவைத்த தம்பி... சென்னையில் பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 30, 2019 03:02 PM

தூங்கிக்கொண்டு இருந்த அண்ணன் வீட்டிற்கு, நள்ளிரவில் தம்பி தீவைத்த பயங்கரம் சென்னையில் நடந்துள்ளது.

younger brother set fire elder brother house, police investigate

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் கண்ணபிரான். இவர் கடந்த 28-ம் தேதி இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் நாட்டு பட்டாசுகளை யாரோ தூக்கி வீசியுள்ளனர். இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கி தவித்து, கூச்சலிட்டுள்ளனர்.

இதைக்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து நால்வரையும் உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. தொடர்ந்து கண்ணபிரான் இதுகுறித்து தன்னுடைய தம்பி சம்பத் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது அண்ணன் வீட்டிற்கு தீ வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் வீட்டிற்கு தீ வைத்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.