‘ரெண்டு புதிய ஆஃபர்’!.. ‘இண்டெர்நெட் வேகம் நொடிக்கு 20MB’.. பிரபல நிறுவனத்தின் அதிரடி சலுகை..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Dec 31, 2019 01:58 PM

பி.எஸ்.என்.எல் நிறுவனம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

BSNL launches two broadband plans with 20Mbps internet speed

பி.எஸ்.என்.எல் நிறுவனம் மாதந்திர சலுகை முறையில் ரூ.299, ரூ.491 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.299 பிராட்பேண்ட் சலுகையில் 50 GB டேட்டா நொடிக்கு 20 Mb வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.  50 GB டேட்டா தீர்ந்தவுடன் டேட்டா வேகம் 1Mb-ஆக குறைக்கப்பட்டுவிடும். மேலும் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 6 மாத வேலிடிட்டி கொண்டிருக்கிறது. அதன் பின்னர் ரூ.399 சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் இதில் தினமும் 2 GB டேட்டா நொடிக்கு 8Mb வேகத்தில் வழங்கப்படுகிறது.

ரூ.491 பிராட்பேண்ட் சலுகையில் 120 GB டேட்டா நொடிக்கு 20Mb வேகத்தில் வழங்கப்படுகிறது. முந்தைய சலுகையை போன்றே டேட்டா தீர்ந்ததும் நொடிக்கு 1Mb-ஆக குறைக்கப்படும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 6 மாதத்திற்கு வழங்கப்படுகிறது. அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.499 சலுகையை பயன்படுத்தலாம். இதில் தினமும் 3  GB டேட்டா வழங்கப்படுகிறது.

Tags : #BSNL #BROADBAND