'வாட்ஸ் அப்'பில் குழந்தைகளின் 'ஆபாச வீடியோ'...'சிபிஐ எடுத்த அதிரடி'...சென்னையை அதிரவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 16, 2019 11:09 AM

குழந்தைகளின் ஆபாச வீடியோகளை வாட்ஸ் அப்பில் பரப்பியதாக, சென்னையில் இருவரது வீடுகளில்  சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Child Porn on whatsapp CBI Raid in 2 places in Chennai

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை வாட்ஸ் அப்பில் பரப்பியதாக ஜெர்மனியில் சஸ்சே டிரெப்கே என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் இந்த ஆபாச வீடியோக்களை வாட்ஸ்அப்-பில் பலரும் பரப்பிவருவதாக சிபிஐ-க்கு ஜெர்மனி தூதரகம் கடந்த ஜனவரி மாதத்தில் கடிதம் எழுதியது.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், இந்த வீடியோகள் ஏழு பேரின் மொபைல் மூலமாக பரவியது தெரியவந்து. இதனைத்தொடர்ந்து அவர்கள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே குழந்தைகளுக்கு எதிரான இந்த குற்றத்தில் ஈடுபட்ட 7 பேரில் சென்னையை சேர்ந்த இருவரும் அடக்கம். இதில் ஜார்ஜ்டவுன் பகுதியைச் சேர்ந்த கொசீமா, சென்னை அருகே சேலையூரைச் சேர்ந்த வினோத் கண்ணன் ஆகியோரின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதனைத்தொடர்ந்து இருவரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது பென் டிரைவ்கள், 11 சிம் கார்டுகள், எஸ்டி கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே 7 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Tags : #SEXUALABUSE #CBI #CBIRAID #WHATSAPP #CHILD PORN #CHENNAI