‘நெருங்கும் வடக்கிழக்கு பருவமழை’... ‘9 மாவட்டங்களில்’... ‘அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு’... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 14, 2019 04:19 PM
தமிழகத்தில், 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை ஆகிய 9 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சிலப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கிழக்கு பருவ மழை துவங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி, அடுத்த 5 நாட்களுக்கு, தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டைய மாநிலங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.