‘இன்று முதல் 4 நாட்களுக்கு’.. ‘தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 15, 2019 12:47 PM

சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு செங்கல்பட்டு தடத்தில் 14 ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Chennai 14 Electric Trains partially cancelled for 4 days

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் காட்டாங்கொளத்தூர் - சிங்கப்பெருமாள் கோவில் இடையே வரும் 16, 17 தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் 2 நாட்களும் மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக கடற்கரை வரை செல்ல வேண்டிய வட்டப்பாதை ரயில் (40900), கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 9.32 மணி, 10.56 மணி ரயில்கள் தாம்பரம் வரையும், காலை 10.08 மணி, 11.48 மணி ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு - கடற்கரை காலை 10.30, 11.30, மதியம் 1 மணி ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்தும், காலை 10.55, மதியம் 12.20 மணி ரயில்கள் தாம்பரத்தில் இருந்தும் இயக்கப்படும். சிங்கப்பெருமாள் கோவில் யார்டு அருகே தண்டவாள பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், வரும் 15, 16, 17, 18 தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட நாட்களில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இரவு 8.01 மணி, 9.18, மணி ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரையும், செங்கல்பட்டு - கடற்கரை இரவு 10.15 மணி, இரவு 11.10 மணி ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்தும் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #ELECTRICTRAIN #CANCELLED #LIST #CHENGALPATTU #TAMBARAM #BEACH #ARAKKONAM #GUDUVANCHERI #SINGAPERUMALKOIL