'கூட்ட நெரிசலில் முண்டியடிச்சுக்கிட்டு ஏற வேண்டாம்!'.. தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்.. வெளியான விபரங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 15, 2019 07:35 PM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களை முன்பதிவு செய்வதற்கான ஓப்பனிங்ஸ் கடந்த ஜூன் 26-ஆம் தேதியே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பேருந்துகளிலும் ரயில்களிலும் டிக்கெட்டுகள் வெகு வேகமாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில், அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் தாம்பரம் திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தவிர தாம்பரம் - திருச்சி இடையே அக்டோபர் 30-ஆம் தேதி காலை 6 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.
அக்டோபர் 20,21,23 ஆகிய தேதிகளில் தாம்பரம் முதல் நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 24-ஆம் தேதி இரவு 8.50க்கு தாம்பரம்-நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28-ஆம் தேதி நாகர்கோவில் முதல் தாம்பரம் வரையிலான சுவிதா சிறப்பு ரயில் இரவு 9.40 மணிக்கும், அக்டோபர் 29-ஆம் தேதி மதியம் 12.55 மணிக்கு ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படவுள்ளன. இதேபோல் விழுப்புரம்-செகந்திராபாத் இடையேவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.