‘சிறுத்தை குட்டியை பிடித்து வைத்து’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 14, 2019 01:06 PM

சிறுத்தை குட்டி ஒன்றை இளைஞர்கள் சித்திரவதை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 yougsters torture a leopard cub video goes viral

வாட்ஸ்அப்பில் வைரலாகி உள்ள வீடியோ ஒன்றில் இளைஞர்கள் சிலர் கும்பலாக சிறுத்தை குட்டி ஒன்றை பிடித்து வைத்து சித்ரவதை செய்கின்றனர். குஜராத் வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், சிறுத்தை குட்டியின் கழுத்தைப் பிடித்து மரக்கிளையின் இடைவெளியில் வைத்து அவர்கள் அதை சித்ரவதை செய்கின்றனர். இதை வீடியோவாகவும் எடுத்து அந்த கும்பல் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வனவிலங்கு நல ஆர்வலர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வீடியோவில் உள்ள இளைஞர்களைக் கண்டறியும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்கள் பற்றிய விவரங்கள் யாருக்கேனும் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 

Tags : #GUJARAT #LEOPARD #CUB #TORTURE #YOUGSTER #GANG #SHOCKING #VIDEO #VIRAL #WHATSAPP #FOREST