'எனக்கு மாதவிடாய்.. அவளயாச்சும் காப்பாத்தி அழச்சுட்டு போங்க'.. சென்னை பெண்ணுக்கு நேர்ந்த சித்ரவதைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 14, 2019 07:51 PM
சென்னை அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கிருஷ்ணவேணி, குடும்ப கஷ்டம் தாளாமல், பெண் ஒருவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவரின் உதவியோடு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

ஆனால் சென்ற இடத்தில் இரண்டரை மாதங்களாக அனுபவித்த நரக வேதனைகள் குறித்த தகவலை அறிந்து அவரை மீட்க உதவியுள்ளார் எய்ம்ஸ் என்கிற என்ஜிஓவின் துணை நிறுவனர் கன்னியாபாபு. தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி மூலம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு விஷயத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த பெண் குவைத்தில் வேலை செய்யவில்லை என்று அங்கிருந்து தகவல் வந்திருக்கிறது. இதனையடுத்து கிருஷ்ணவேணியை குவைத்துக்கு அனுப்பி வைத்த திருவண்ணாமலை ஏஜெண்ட் செந்தமிழனை பிடித்து விசாரிக்க, அவரோ, தனது சொந்த செலவில் கிருஷ்ணவேணியை அழைத்து வருவதாகக் கூறினார்.
அடுத்த 17 நாட்களுக்குள் மீட்கப்பட்டு சென்னைக்கு திரும்பிய கிருஷ்ணவேணியை விசாரித்தபோது, தன்னை அனுப்பிவைத்த ஏஜெண்ட் செந்தமிழன், தன்னிடம் 2 விசாக்களை கொடுத்து அனுப்பியதாகவும், அதில் ஒன்றை நாப்கினுக்குள் வைத்துக்கொள்ளவும், இன்னொன்றை மட்டுமே அதிகாரிகளிடம் காண்பிக்கவும் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த 2 மாதங்களில் சொல்ல முடியா துயரங்களை குவைத்தில் அனுபவித்ததாகக் கூறிய கிருஷ்ணவேணி, அங்கிருந்த இன்னொரு பெண் மாதவிடாய் பிரச்சனை முற்றிப் போனதை ஏஜெண்ட்டிடம் கூறியும் அவளை விடாததால், கிருஷ்ணவேணியை மட்டும் அனுப்பி வைக்க அந்த பெண் உதவியதாகவும் கூறியுள்ளார். இப்படி இன்னும் பல பெண்கள் இப்படி அங்கு கஷ்டப்படுவதாக கன்னியாபாபு தெரிவித்துள்ளார்.
