‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 12, 2019 07:06 PM

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Heavy rain alert in 9 districts Tamilnadu IMD Chennai

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமுட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Tags : #HEAVRRAIN #RAIN #ALERT #IMD #CHENNAI #DISTRICTS #LIST #TAMILNADU