‘சீன அதிபருடனான சந்திப்பு முடிந்து’.. ‘டெல்லி திரும்பிய மோடி’.. ‘ட்விட்டரில் ட்ரெண்டாகும் #DONTGOBACKMODI’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 12, 2019 04:16 PM

சீன அதிபருடனான சந்திப்பு முடிந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

PM Modi returns to Delhi from Chennai Dont Go Back Modi

சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இடையிலான முறைசாரா சந்திப்பு நேற்றும், இன்றும் மாமல்லபுரத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் வர்த்தகம் , முதலீடு, தீவிரவாதம், தீவிரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சனைகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். சந்திப்பு முடிந்து நேபாளம் புறப்பட்டுச் சென்ற சீன அதிபர் மாமல்லபுரம் சந்திப்புக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்த தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கோவளத்திலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். புறப்படும் முன் அவர் சென்னை கனெக்ட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், சீனாவின் மாண்டரின் ஆகிய மொழிகளில் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாவது வழக்கம். அதன்படி நேற்றும் #GoBackModi ட்ரெண்டானது. இந்நிலையில் இன்று DontGoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து பலரும் இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து தமிழில் பேசி சீன அதிபரை மோடி வரவேற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Tags : #PMMODI #MODIXIMEET #XIJINPING #DONTGOBACKMODI #CHENNAI