‘மதுவுடன் டீசலைக் கலந்து குடித்துவிட்டு’.. ‘மனைவியின் சடலத்தோடு தூங்கிய இளைஞர்’..‘சென்னையில் தம்பதி எடுத்த விபரீத முடிவு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 15, 2019 01:47 PM

சென்னையில் தற்கொலை செய்துகொண்ட மனைவியின் சடலத்தோடு இளைஞர் ஒருவர் மதுவுடன் டீசலைக் கலந்து குடித்துவிட்டு ஒரு மணி நேரம் மயங்கிக் கிடந்துள்ளார்.

Chennai Man attempts suicide after wife kills self at Manali

சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள கொசப்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரஞ்சித் (24) - ரஞ்சனி (எ) சரண்யா (20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களுடைய வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்துள்ளனர். அப்போது படுக்கையறையில் படுத்திருந்த ரஞ்சித்தும், சரண்யாவும் நீண்ட நேரமாக கூப்பிட்டும் எந்த அசைவும் இன்றி இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் சரண்யா சடலமாகக் கிடந்துள்ளார்.  அவருடைய கழுத்தில் காயங்களும், அறையில் தூக்கு போட்டுக்கொண்டதற்கான அடையாளங்களும் இருந்துள்ளன. அவருக்கு அருகில் மயங்கிய நிலையில் இருந்த ரஞ்சித்தை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் போலீஸார் ரஞ்சித்திடம் நடத்திய விசாரணையில் குழந்தை இல்லாததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர் தினமும் சரண்யாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. கடந்த 13ஆம் தேதியும் வழக்கம்போலவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலை வெளியே சென்ற ரஞ்சித் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சரண்யா தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரஞ்சித் மது வாங்கி வந்து அதில் டீசலைக் கலந்து குடித்துவிட்டு மனைவியின் சடலத்தோடு படுத்துக்கொண்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் அவர் அப்படியே மயங்கிக் கிடந்துள்ளார்.

Tags : #CHENNAI #COUPLE #HUSBAND #WIFE #SUICIDE #DEADBODY #DIESEL