‘இன்னும் ரெண்டே மாதம்தான்’ வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Oct 14, 2019 10:25 AM

‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ என்னும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப்ஷன் இன்னும் இரண்டு மாதங்களில் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp may get to launch payment service in two months

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தகவல் பரிமாற்றத்துக்கு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்டுகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ‘வாட்ஸ் அப் பே சர்விஸ்’ என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே உள்ள கூகுள் பே, பேடிஎம் போன்ற டிஜிட்டல் பணபரிவர்த்தனை செயலிகள் உள்ள நிலையில் இதே முறையை வாட்ஸ் அப் நிறுவனமும் கொண்டுவர உள்ளது. கடந்த ஒரு வருடமாக சோதனை முயற்சியில் இருக்கும் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தபடாலம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகமான பயனர்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டுள்ளதால் அவர்களை கவரும் வகையில் இந்த ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #WHATSAPPUPDATE #WHATSAPP #PAYMENTSERVICE