'உங்க மேல கம்ப்ளெய்ண்ட் வந்துருக்கு.. கொஞ்சம் வர்றீங்களா?'... போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த போன்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 15, 2019 12:04 PM

சென்னையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் பயந்துபோய் ரயிலில் பாய்ந்து இளைஞர் செய்த காரியம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

chennai youth commits suicide by falling into train track

சென்னை மாதவரம் அருகே பொன்னியம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்க்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே உண்டான தகராறில், ரமேஷ் மீது வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த புகாரை விசாரிக்கும் அடிப்படையில், போலீஸார் ரமேஷ்க்கு போன் செய்து, விசாரணைக்காக காவல் நிலையம் வருவதற்குக் கோரியுள்ளனர். ஆனால் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்பதும் பயந்துபோன ரமேஷ், தனது நண்பனுக்கு போன் செய்து, தான் பயந்துவிட்டதாகவும், அதனால் வில்லிவாக்கம் ரயில்வே நிலையத்தில் பாய்ந்து ரயிலின் முன்பு தற்கொலை செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோவும் வெளியாகியுள்ள நிலையில், ரமேஷின் தற்கொலைக்கு வெங்கடேசனும் ஒருவிதத்தில் காரணம், ஆதலால் அவரை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அதன் பின்னர் தக்க நடவடிக்கை எடுப்பட்தாக காவல் துறையினர் உறுதி அளித்த பிறகு மக்கள் கலைந்தனர்.

போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞர் ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #CHENNAI #TRAIN #BIZARRE