‘சென்னை மாநகரப் பேருந்தை முந்த முயன்றவர்’.. ‘நொடியில் சக்கரத்தில் சிக்கி நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 14, 2019 09:59 PM

சென்னையில் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது அதன் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Chennai Man dead in MTC bus two wheeler accident

சென்னை கே.கே நகரைச் சேர்ந்த வியாபாரியான மகேந்திரன் இன்று மதியம் வடபழனியிலிருந்து அசோக் நகர் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.  அப்போது குறுகிய சாலையில் முன்னால் சென்ற மாநகர பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது அவருடைய இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது.

இதில் மகேந்திரன் மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அதை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : #CHENNAI #MTC #BUS #VADAPALANI #ACCIDENT #TWOWHEELER