'ஒரு தடவ இல்ல, ரெண்டு தடவ'...'இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'...தந்தையுடன் சிக்கிய 'சென்னை இளைஞர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 17, 2019 02:11 PM

ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, சென்னை இளைஞர் கருக்கலைப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai youth and father arrested for cheating a foreign girl

சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. இவர் மொத்தமாக மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வருகிறார். இதன் காரணமாக அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு சில வருடங்களுக்கு முன்பு துபாய் சென்ற போது, உக்னே பெரவேரி செவைத் என்ற 22 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்துள்ளது.

ஐரோப்பாவை சேர்ந்த உக்னே, துபாயில் மேல்படிப்பு படித்து கொண்டிருந்தார். முதலில் நண்பர்களாக பழகிய இருவரும் பின்பு காதலிக்க தொடங்கினார்கள். காதலின் நெருக்கம் அதிகமாகவே உக்னே கற்பமடைந்துள்ளார். இதையடுத்து ருமேஸ் அகமதுவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி அவர் கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ருமேஸ் அகமது அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து 5 மாத கர்ப்பிணியான உக்னே, ருமேஷ் அகமது மற்றும் அவரது தந்தை வற்புறுத்தி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கருக்கலைப்பு செய்த பின் ருமேஸ் அகமது உடனான காதலால் அந்தப் பெண் மீண்டும் கருவுற்று இருக்கிறார். இதனால் இந்த முறையும் கருவை கலைத்து விடலாம் என ருமேஷ் சொல்ல, மீண்டும் பிரச்சனனை பெரிதாகி இருவருக்குள்ளும் சண்டை மூண்டுள்ளது.

இந்நிலையில் தற்போது எழும்பூர், மாண்டியத் தெருவில் தங்கியுள்ள அந்த பெண்,  தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி துபாயில் இருந்து அழைத்து வந்து ஏமாற்றுவதாக ருமேஸ் அகமது மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ருமேஷ் அகமதுவை கைது செய்தனர். மேலும் உக்னே மிரட்டிய ருமேஷ் அகமதுவின் தந்தையும் தொழில் அதிபருமான அப்துல் கரீமையும் கைது செய்தனர்.

வெளிநாட்டு பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞரின் செயல் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #BUSINESSMAN #CHEATING #THOUSAND LIGHTS #ALL-WOMAN POLICE