இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 17, 2019 10:53 AM
1. ராஜீவ் காந்தி படுகொலை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள சீமானுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “சீமானின் கோபம் சரிதான். ஆனால் விடுதலைப் புலிகள் மறுத்த கருத்தைப் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

2. 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சச்சின் டெண்டுல்கர் மேதை பிரையன் லாராவின் 11,953 ரன்களைக் கடந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
3. கணித்ததை விட ஒரு நாள் முன்னதாகவே வடகிழக்கு பருவழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
4. ஆந்திராவில் கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்தினருக்கு ஒய்எஸ்ஆர் நேசன்னா நேஸ்தம் என்ற திட்டத்தின்கீழ் 24 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ஆம் தேதி நெசவாளர் தினமாகக் கருதி இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது.
5. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிற டிசம்பர் மாதத்திற்குள் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே கல்குவாரியில் பாறைகளை தகர்க்க வைக்கப்பட்ட வெடி மின்னல் தாக்கியதில் திடீரென வெடித்துச் சிதறி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
7. தோனி குறித்து தேர்வுக்குழுவினரின் கருத்தை அறிந்த பின்னரே தோனியின் எதிர்காலம் குறித்து தெரிவிக்க முடியும் என பிசிசிஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
8. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 69% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழப்பதாக யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
9. திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
10. தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11. மத்தியப்பிரதேசத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் பி.சி.சர்மா, “நம்முடைய சாலைகள் இப்போது பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னம் போல குண்டும் குழியுமாக உள்ளது. சாலை பழுது பார்க்கப்பட்ட பின் ஹேமமாலினியின் கன்னம் போல சீராக பளபளவென்று இருக்கும்” எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
12. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் நடப்பது இரு நாட்டு பிரதமர்கள் கையில் தான் இருக்கிறது என்று பிசிசிஐ தலைவராக பதவியேற்க உள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
13. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
