இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 16, 2019 11:30 AM
1. செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அலிபாபாவும் 40 திருடர்களும் என்பது போல அம்மாவும் 40 திருடர்களும் என அமைச்சர்கள் உள்ளனர். என்ன இப்போது அம்மா இல்லை திருடர்கள் தான் உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

2. தமிழகத்தில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
3. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் காவிரி கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளை பெங்களூர் போலீஸார் தோண்டியெடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
4. போட்டியின்போது நிதானமாக இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள தோனி “களத்தில் எனக்கும் கோபமும், விரக்தியும் ஏற்படும். ஆனால் நான் என்னுடைய உணர்ச்சிகளை மற்ற நபர்களை விட சற்று சிறப்பாக கட்டுப்படுத்துகிறேன் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
5. சென்னையில் 5 இடங்களில் சைட்டூன் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
6. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7. இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
8. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஜனவரியிலிருந்து இதுவரை 3400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
9. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தமாக 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
10. உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான குறியீட்டில் இந்தியா 102வது இடத்தில் உள்ளது. 117 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இலங்கை 66வது இடத்திலும், வங்கதேசம் 88வது இடத்திலும், பாகிஸ்தான் 94வது இடத்திலும் உள்ள நிலையில் இந்தியா இந்த நாடுகளை விட பின்தங்கியுள்ளது.
11. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என ரஜினி எதை வைத்துக் கூறினார்? அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
12. இந்தியாவின் முதல் 5G டெக்னாலஜி வீடியோ கால் டெல்லியில் நடைபெற்ற இந்திய செல்ஃபோன் மாநாடு நிகழ்ச்சியில் டெமோ சோதனை செய்யப்பட்டுள்ளது.
13. கல்கி ஆசிரமம் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளது. அதன் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
