‘கையில பட்டாக்கத்தி’.. விரட்டி விரட்டி தாக்கிய மர்மநபர்கள்..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 08, 2019 03:07 PM

குஜராத்தில் காவலர்களை வாள் மற்றும் கம்புகளால் தாக்கும் மர்ம நபர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mysterious persons attacked security guards with swords in Gujarat

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் கண்ட்லா சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளது. இங்கு செல்வதற்காக சில நபர்கள் வந்துள்ளனர். ஆனால் அவர்களை காவலர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காவலர்களை சரமாரியாக தாக்கயுள்ளனர்.

கடந்த சனிக்கிழஜை நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் மர்மநபர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை வாள் மற்றும் கம்புகளால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #POLICE #GUJARAT #SECURITY #ATTACKED #SWORDS