'உன்னோட வேலைய நீ பாரு'...'என்னோட வேலைய நான் பாக்குறேன்'...வைரலாகும் கியூட் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 09, 2019 10:38 AM

காவல்துறை அதிகாரி ஒருவரின் தோளில் அமர்ந்து, குரங்கு ஒன்று பேன் பார்க்கும் வீடியோ வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

Monkey sat on the shoulder of inspector and searched for lice

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியின் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஸ்ரீகாந்த திவேதி. இவர் காவல்நிலையத்தில் அமர்ந்து சீரியசாக முக்கிய கோப்புகளை பார்த்து கொண்டிருக்கிறார். அப்போது குரங்கு ஒன்று ஸ்ரீகாந்த திவேதி தோள்பட்டை மீது அமர்ந்து கொண்டது. அதோடு அவரின் தலையில் பேனும் பார்த்துக் கொண்டிருந்தது.

மனிதர்கள் செய்வதை போன்று குரங்கு பேன் பார்த்த வீடியோ பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதோடு காவலர் ஸ்ரீகாந்த திவேதியும் எதையும் சட்டை செய்யாமல் தனது பணிகளை கவனித்து வருவது,  பலரையும் வாயடைத்து போக செய்துள்ளது. விலங்குகள் எப்போதுமே அன்பனவைதான், நாம் தான் அவற்றை துன்புறுத்துகிறோம் என பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #POLICE #DWIVEDI #PILIBHIT #POLICE STATION #MONKEY