‘திருமணத்திற்கு சம்மதிக்காத மைனர் பெண்ணிற்கு’.. ‘தந்தை கண்முன்னே’.. ‘இளைஞரால் நேர்ந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 10, 2019 11:17 AM

திருமணத்திற்கு சம்மதிக்காததால் 17 வயது பெண்ணை இளைஞர் எரித்துக் கொலை செய்துள்ளார்.

Man sets Teen girl on fire for turning down marriage proposal

கேரளாவின் கொச்சி பகுதியில் வசித்து வரும் தேவிகா (17) என்ற பெண் மிதுன் (24) என்ற இளைஞரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி தேவிகாவிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் தேவிகா தான் படிக்க வேண்டும் எனக் கூறி திருமணத்திற்கு மறுத்து வந்துள்ளார்.

அதைமீறியும் அவர் தேவிகாவிற்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால், அவருடைய பெற்றோர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மிதுனையும் அவருடைய பெற்றோரையும் அழைத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இனி தேவிகாவை தொந்தரவு செய்ய மாட்டேன் என மிதுனும் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தேவிகாவின் வீட்டிற்கு வந்த மிதுனை அவருடைய தந்தை தடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக தான் வாட்டர் கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தேவிகா மீது ஊற்றி மிதுன் தீ வைத்துள்ளார். இதில் மிதுன் மீதும், தேவிகாவைக் காப்பாற்ற வந்த அவருடைய தந்தை மீதும் தீ பற்றியுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேவிகாவும், மிதுனும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவருடைய தந்தை தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Photo Credit : Manorama

Tags : #CRIME #KERALA #KOCHI #TEEN #MINOR #GIRL #LOVER #MARRIAGE #PROPOSAL #PETROL #FIRE #DEAD