சாலையோரம் அசந்து தூங்கிய பக்தர்கள் மீது மோதிய பேருந்து..! பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியான சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 11, 2019 03:24 PM

சாலையோரமாக தூங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 killed as bus runs over pilgrims sleeping on roadside in UP

உத்தரப்பிரதேச மாநிலம் மோகன்புரா மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கடந்த 3 -ம் தேதி ஆன்மிக சுற்றுலாவாக ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது புலந்த்ஷர் பகுதியில் உள்ள நரோரா என்னுமிடத்தில் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி அப்பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரமாக படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை டிரைவரின் கட்டுப்பட்டை இழந்த பேருந்து ஒன்று சாலையோரமாக தூங்கியவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் பலியான உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் விபத்துக்கான காராணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #UTTARPRADESH #KILLED #BUSACCIDENT #PILGRIMS