'பெட் ரூமில் தூங்கி கொண்டிருந்த கணவன்'... 'திடீரென நர்ஸ் செய்த விபரீதம்'... சென்னையில் நடந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த பட்டாபிராம் தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் ஜோஷிரீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ரேச்சல் என்ற மகளும், ஜான் பிரபாகர் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். பி.சி.ஏ படித்துள்ள சதீஷ், சொந்தமாக தொழில் செய்து வரும் நிலையில், ஜோஷிரீனா பி.எஸ்சி.நர்சிங் முடித்துவிட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வந்தார்.
இதனிடையே தான் பார்த்து வந்த வேலையை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா செய்த ஜோஷிரீனா, வரும் 26-ந் தேதி சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலையில் சேர இருந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜோஷிரீனா அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஜோஷிரீனா கடும் விரக்தியில் இருந்துள்ளார். இந்த நேரத்தில் நேற்று முன்தினம் இரவு கணவர் மற்றும் குழந்தைகள் படுக்கையறையில் தூங்க சென்றுள்ளார். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் ஜோஷிரீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வெளியே வந்து பார்த்த போது, ஜோஷிரீனா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த பட்டாபிராம் போலீசார், ஜோஷி ரீனா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
