'கல்யாணமான 6 மாதத்தில்'... 'காதல் மனைவி எடுத்த அவசர முடிவால்'... 'கணவனுக்கு நேர்ந்த துயரம்'... 'கடைசியில் நடந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 24, 2020 11:43 PM

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாமல், கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Love marriage Husband and wife committed suicide by hanging

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் பிரசாந்த் (25). சென்னையில் வெல்டிங் வேலை செய்து வந்த இவரும், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த காஞ்சிபுரம் அருகேயுள்ள கல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கோமதியும் (19) காதலித்துள்ளனா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, இருவரும் சோகத்தூா் கிராமத்தில் பிரசாந்த் வீட்டிலேயே வசித்து வந்தனா். பின்னா் கடந்த 3 மாதங்களாக தம்பதியினா் அதே கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தனிக் குடித்தனம் நடத்தி வந்தனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை கூலி வேலைக்குச் சென்ற பிரசாந்த், பின்னா் வீடு திரும்பியபோது வீட்டின் பின் தாழ்வாரத்தில் கோமதி புடவையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால் வேதனையடைந்த பிரசாந்த், கோமதியின் சடலத்தை மீட்டு கீழே வைத்துவிட்டு அதே இடத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த தெள்ளாா் போலீஸாா் சம்பவ இடம் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #HUSBAND #WIFE #SUICIDE