113 பேருடன் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானம்.. 9 பேருக்கு கொரோனா அறிகுறி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 113 பேரில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் 113 பேரும் நேற்று இரவு ஏர் ஏசியா விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனை அடுத்து விமான நிலையத்தில் அனைவருக்கும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள 104 பயணிகளும் தாம்பரத்தில் உள்ள முகாமுல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tamil Nadu: Out of the 113 passengers who were brought back from Malaysia on board Air Asia flight to Chennai last night, 9 symptomatic passengers were referred to hospital, while the remaining 104 were taken to Air Force quarantine facility in Tambaram yesterday. #COVID19 pic.twitter.com/d0NP3AVNsH
— ANI (@ANI) March 24, 2020