‘சென்னையில்’ மேலும் ‘3 பேருக்கு’ கொரோனா... ‘பாதிக்கப்பட்டவர்கள்’ எந்தெந்த ‘பகுதிகளை’ சேர்ந்தவர்கள் என ‘அமைச்சர்’ தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 24, 2020 02:33 PM

சென்னையைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Chennai 3 Coronavirus Cases In Porur Purasaivakkam Keelkattalai

வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 3 பேரில் ஒருவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய 74 வயது முதியவர் ஆவார். இவர் போரூர் பகுதியைச் சேர்ந்தவர். இரண்டாவது நபர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய 54 வயது பெண் ஆவார். இவர் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய 24 வயது இளைஞர் ஆவார். இவர் கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர். இவர்களில் 2 பேருக்கு ஸ்டான்லி மருத்துவமனையிலும், ஒருவருக்கு கேஎம்சி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Tags : #CORONAVIRUS #CHENNAI #PORUR #PURASAIVAKKAM #KEELKATTALAI #STANLEY #KMC