'அண்ணே, இந்த ஒன் மீட்டர் டிஸ்டன்ஸ்' ... அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு ... பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி சென்ற மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 24, 2020 05:39 PM

ஊரடங்கு உத்தரவையையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மதுபானக்கடை ஒன்றில் ஆண்கள் திரளாக நின்று பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

People in Chennai makes crowd to buy Liquors before 144

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. பொது இடங்களில் அதிகமாக மக்கள் கூட வேண்டாம் என்றும், ஒருவரை ஒருவர் தொட வேண்டாம் எனவும் மருத்துவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இதனைப் பொருட்படுத்தாமல் இந்திய மக்கள் பல இடங்களில் ஒன்றாக கூடியும், திரிந்தும் வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள் ஒன்றாக பொதுவெளிகளில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. மக்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான மளிகை மற்றும் காய்கறி கடைகள், வங்கிகள் போன்றவை மட்டுமே செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. மதுக்கடைகள் அனைத்தும் அடுத்த ஒரு வாரம் செயல்படாது என்பதால் மது பிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மதுக்கடை ஒன்றின் முன் திரளாக கூடியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க மற்றவர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்ததை காற்றில் பறக்க விட்டு கூட்டமாக வரிசையில் நின்று பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூட்டமாக பேருந்துக்கு காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHENNAI #TAMILNADU #144