“கோயில்கள் மூடப்பட்டாலும்.. தெய்வங்கள் எல்லாம் மருத்துவமனையில்!”.. மருத்துவ ஊழியர்களுக்கு தமிழக அரசு ‘சிறப்பு’ அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படவிருக்கிறது.
அதுமட்டுமன்றி நாடுமுழுவதும் கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தீவிரமாக உழைத்து வரும் நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா விவகாரத்தில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும், கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதோடு, கொரோனாவை எதிர்கொள்வதற்காக இரவு பகலாக பணியாற்றி வரும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பு கருதி, அவர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.