முதல் 'மனைவிக்கு' தெரியாமல் 2-வது திருமணம்... 2 மனைவிகளும் 'வெறுத்ததால்'... 'மதுரை' வாலிபர் எடுத்த விபரீத முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் இருளாண்டி(35) இவருக்கு முத்து ராமு என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் ஆனது. ஆனால் அதனை மறைத்து மீனா என்ற பெண்ணை இருளாண்டி 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இது இரண்டு பேருக்கும் தெரியவர இருவரும் இருளாண்டியுடன் சண்டை போட்டு அவருடன் வாழ முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் விரக்தியடைந்த இருளாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : #MADURAI #POLICE #SUICIDEATTEMPT
