காதல் 'திருமணம்' செய்த 9 மாதங்களில்...'தற்கொலை' செய்துகொண்ட 'கர்ப்பிணி' மனைவி... அதிர்ச்சியில் கணவர் எடுத்த 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 20, 2020 08:28 PM

காதல் திருமணம் செய்த இளம்தம்பதி அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Newly married Couple Suicide Near Panruti, Details!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(29). இவரது மனைவி மகேஸ்வரி(22). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 9 மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது மகேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் தூங்க சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் எழுந்த மகேஸ்வரி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவில் திடுக்கிட்டு எழுந்த மணிகண்டன் மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ந்து போய் அவரை கீழே இறக்கி பார்த்துள்ளார்.

மகேஸ்வரி இறந்தது தெரிய வந்ததும் மணிகண்டனும் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வெகு நேரமாகியும் மகேஸ்வரி வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்,பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு மகேஸ்வரி, மணிகண்டன் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர். தொடர்ந்து இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.