‘சென்னை மெரினாவில் நடந்து சென்ற இளைஞர்’... ‘6 பேர் கொண்ட கும்பலால் நடந்த பயங்கரம்’... ‘சிதறி ஓடிய மக்கள்’‘!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 20, 2020 11:16 PM

மெரினா கடற்கரைக்கு நடைப்பயிற்சி சென்ற இளைஞரை சுற்றிவளைத்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A youth in Chennai Marina was cut down by a 6-member mob.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் 19 வயதான ராஜேஷ். வீட்டிற்கு எதிரே மெரினா கடற்கரை உள்ளதால் தினமும் அங்கு உறங்குவது வழக்கம். நேற்றிரவு ராஜேஷ் மது போதையில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். சிறிது தூரம் நடந்து செல்லலாம் என்று நினைத்த ராஜேஷ் கண்ணகி சர்வீஸ் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை பின் தொடர்ந்துள்ளது.

சிறிது நேரத்தில் ராஜேஷை துரத்த தொடங்கிய கும்பல் கூச்சலிட்டபடி கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக துரத்தி துரத்தி வெட்டியுள்ளது. சுற்றியிருந்த பொதுமக்கள் சிதறி ஓட கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியது. வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் நிலை தடுமாறி சாலையில் சரிந்த ராஜேஷை மீட்ட அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இளைஞர் ராஜேஷூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞர் வெட்டப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மெரினா கடற்கரை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடைபெற்றதும் தெரியவந்தது.

Tags : #ATTACKED #MOB #MARINA #CHENNAI #YOUTH