‘மகள் வயது பெண்ணுடன் திருமணம்’.. ‘தந்தை மீது புகார் கொடுத்த மகள்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 21, 2020 06:50 AM

பல்லாவரம் அருகே மகள் வயது பெண்ணை திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai man arrested by police due to marriage issue

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் அருகே ஞானமனி நகரை சேர்ந்தவர் கண்ணன் (48). இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 19 வயது மற்றும் 12 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கண்ணன் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டிட பணியின்போது யுவராணி (45) என்ற பெண்ணுடன் கண்ணன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் யுவராணியின் மகள் கல்பணா (19) என்ற பெண்ணை கண்ணன் திருமணம் செய்து செங்கல்பட்டில் வசித்து வந்தது மஞ்சுளாவுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொலைபேசியில் கேட்டபோது கண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மஞ்சுளா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் உறவினர்கள் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மஞ்சுளா சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை அடுத்து கண்ணின் மூத்த மகள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் கண்ணனை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #CHENNAI #MARRIAGE #FATHER #ARRESTED