‘சிகரெட் பிடிச்சது அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்’.. பயத்தில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 27, 2020 06:43 PM

சிகரெட் பிடிக்கும் விஷயம் அப்பாவுக்கு தெரிந்தால் திட்டுவார் என்ற பயத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad college student ends life after being caught with cigarettes

தெலுங்கானா மாநிலம் ஜக்தியல் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கல்லூரி ஹாஸ்டல் நிர்வாகத்தால் மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அப்போது ஹாஸ்டல் ஊழியர்கள் சஞ்சீவ் குமாரை சோதனை செய்தபோது அவரது பாக்கெட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து சஞ்சீவின் தந்தைக்கு தகவல் கொடுக்கப்போவதாக ஹாஸ்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தனது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்ற பயத்தில் விடுதி அறையில் உள்ள குளியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சஞ்சீவ் தூக்கில் தொங்குவதைக் கண்ட சகமாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகிகளுக்கு கொடுக்கவே, உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் சஞ்சீவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகரெட் பிடிப்பது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்ற பயத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #COLLEGESTUDENT #HYDERABAD