'நேற்று காணாமல் போன சிறுமி'... இன்று வீட்டின் அருகேயுள்ள ஆற்றில் ... 'சடலமாய்' மிதந்த துயரம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Feb 28, 2020 11:13 AM

கேரளாவில் தேவானந்தா என்னும் ஆறு வயது சிறுமி நேற்று காலை முதல் காணாமல் போன நிலையில், இன்று காலை தனது வீட்டின் அருகேயுள்ள ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

Dead body of missing girl in Kerala found at a river

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் - தன்யா தம்பதியின் மகள் தேவானந்தா நேற்று காலை தனது வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போன நிலையில் வீட்டின் அருகேயுள்ள ஆற்றில் தவறுதலாக விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் ஆற்றில் இறங்கி தேடினர். நேற்று முழுவதும் தேவானந்தா குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில் இன்று காலை அதே ஆற்றில் தேவானந்தா உடல் சடலமாக மிதந்தது. அது தேவானந்தா தான் என உறவினர்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று காலை தன்யா ஆற்றில் துணி துவைக்க சென்ற நிலையில் சிறுமி தேவானந்தா தனது தாயை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது தனது மகளை வீட்டில் செல்லுமாறு கூறிவிட்டு தேவானந்தா வீட்டிற்குள் செல்வதை உறுதி செய்த பின் துணி துவைக்க சென்றுள்ளார். துணி துவைத்து விட்டு வீடு திரும்பிய தன்யா, வீடு முழுவதும் தேடியும் தனது மகளை எங்கும் காணாததால் அதிர்ச்சியில் அருகிலுள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். மஸ்கட்டில் வேலை செய்து வரும் தந்தை பிரதீப் குமார் இன்று காலை கொல்லம் வந்தடைந்தார்.

Tags : #DEVANANDHA #KERALA #KOLLAM #MISSING