'ஆண் நண்பர்களை'... 'மறைத்து வைக்க நினைத்த 15 வயது மகள்’... ‘பெற்றோர் கொடுத்த நூதன தண்டனை’... வைரலான ஜாலி வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Dec 10, 2019 10:46 PM
அமெரிக்காவைச் சேர்ந்த மேட்லின் (15) என்ற சிறுமி, தனது வீட்டில் நடைபெற்ற தேநீர் பார்ட்டிக்குத் தன் ஆண் நண்பர்களைப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அழைத்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த நண்பர்களை, அவர்களின் கண்களில் படாமல், ‘கில்லி’ படம்போல் மறைத்துவைக்க முயன்றபோது, மேட்லின் தன் பெற்றோரிடம் மாட்டிக்கொண்டார்.
இனிமேல், தங்கள் மகள் இப்படி செய்யக்கூடாது என நினைத்த பெற்றோர், 2 விதமான நூதனத் தண்டனை மகளுக்கு கொடுத்தனர். அதாவது, மேட்லின் ஒரு மாதம் மொபைல் பயன்படுத்தக் கூடாது அல்லது 2 வாரங்களுக்கு மேட்லினின் சோஷியல் மீடியா பக்கங்களை பெற்றோர்கள் பயன்படுத்துவார்கள் என்பதுதான். இதில் இரண்டில் எத பெஸ்ட் தண்டனை என்று நீயே முடிவு செய்துகொள் என்று பெற்றோர் கூறியுள்ளனர். மொபைல் இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது என்று எண்ணிய மேட்லின், பெற்றோர் சொன்ன 2-வது தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
அதன்படி மேட்லினின் சோஷியல் மீடியாவை, அவரின் பெற்றோர் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு நடந்ததுதான் அட்டகாசமான சம்பவங்கள். மேட்லினின் அப்பா லாரி சம்ப்டர், மேட்லினின் இன்ஸ்டாகிராம், டிக்-டாக் பக்கங்களில், தான் எடுக்கும் வித்தியாசமான புகைப்படங்களையும், நகைச்சுவை வீடியோக்களையும் பதிவிட ஆரம்பித்தார். மேலும் இன்ஸ்டாகிராமில் மேட்லினின் புகைப்படத்தைப் பதிவிட்ட பெற்றோர், ‘இது மேடி. இவள் தனது சோஷியல் மீடியா கன்ட்ரோலை, தனது பெற்றோருக்கு 2 வாரங்களுக்கு கொடுத்துவிட்டதால், அதில் நீங்கள் சுவாரஸ்யமான சில பதிவுகளை அவளின் பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்று ஜாலியாக பதிவிட்டனர்.
பின்னர் அரைகுறை ஆடைகளுடன் மேட்லினின் தந்தையும், அவர் நண்பரும் சேர்ந்து சேட்டைகள் செய்ய ஆரம்பித்தனர். மேலும், அவர் பெண்களின் உடை அணிந்து பதிவிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும், அதிகளவில் லைக்குகளையும் கமென்ட்களையும் பெற்றன. இதனை சமாளிக்க முடியாமல், மேட்லின் தன் பெற்றோரிடம் சென்று, தான் ஒரு மாதம் மொபைல் இல்லாமல் இருக்கும் தண்டனையையே ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். ஆனால், தங்களது வாக்கை திரும்பி வாங்கப் போவதில்லை என்று அவரது பெற்றோர் மறுத்துள்ளனர். அமெரிக்காவில் தற்போது திடீரென பிரபலமாகியுள்ள இந்த அதகள பெற்றோரின் புதிய சோஷியல் மீடியாவில் புதிதாக பலர் இணைந்து வருகின்றனர்.