'சங்க அறுத்துட்டு போய்ட்டே இருப்பேன்!'.. மூத்த தாரத்தின் 9 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!.. வீடியோவால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Dec 10, 2019 09:11 AM

மாற்றாந்தாய் ஒருவர், மூத்த தாரத்தின் 9 வயது பெண் குழந்தையை மிரட்டி, அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து, பார்த்தவர்களை பதைபதைக்கவைத்தது.

woman threatens and assaults husbands first wife\'s girl child

மலேசிய தமிழ்ப் பெண்ணான இவரது தம்பிதான் இந்த வீடியோவை எடுக்கிறார். அந்த பெண்ணிடம், அக்கா என்று சொல்லிக்கொண்டே வீடியோ எடுத்தபடி அறைக்கதவை தட்டிவிட்டு வருகிறார். அப்போது சிறுமியிடம் அந்த பெண்மணி, மிரட்டும் தொனியில்  ‘இங்க பார், உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல. உன் அப்பன் சொன்னதுனால இங்க இருக்க. மத்தபடி எனக்கு என் மகன் மட்டும்தான். நீ ஒரு பிணம். என் வயித்துல பொறந்தியா? இல்லல? அப்றம் அம்மா, தம்பினு சொந்தம் கொண்டாடிட்டு வந்த.. சங்க அறுத்துட்டு போய்ட்டே இருப்பேன்’ என்று மிரட்டுகிறார்.

இந்த 2 நிமிட வீடியோவில் சிறிய கத்தியைக் காட்டி சிறுமியை மிரட்டும் மாற்றாந்தாயை பார்த்த பலரும் கொந்தளித்துள்ளனர். ஆனால் இந்த வீடியோ முழுமையாக 16 நிமிடங்கள் என்றும், அதை பார்த்தால் இன்னும் கொடுமையாக இருப்பதாகவும் தெரிவித்த போலீஸார், அதன் சிறுமியை அடித்து, தாக்கி முடியைப் பிடித்து இழுத்து அறைக்கு வெளியே அந்த பெண் தள்ளுவது வரையிலான காட்சிகள் வீடியோவில் இருப்பதாக கூறியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவை அடுத்து, பலரும் கொடுத்த பொதுபுகார்களின் அடிப்படையில், மலேசியா கோலாலம்பூரில் உள்ள ஜின்ஜாங் பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் 22 வயது பெண்மணிதான், தனது கணவரின் மூத்த தாரத்துக்கு பிறந்த குழந்தையை இவ்வாறு கொடுமைப்படுத்தியுள்ளார் என்பதை போலீஸார் விசாரித்தனர். அதன் பின்னர் மலேசியக் குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை விசாரணை அமைப்பு, அந்த பெண் மீது மலேசியக் குழந்தைகள் வன்கொடுமைச் சட்டம் 31(1) D-2011-ன் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.

Tags : #MOTHER #DAUGHTER