'மன்னிச்சிருங்க அப்பா!'.. 'மூங்கிலால் ஓங்கி தாக்கி.. கொசு கொல்லி ஸ்ப்ரே அடித்து'.. கடிதத்தால் சிக்கிய 19 வயது மகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 10, 2019 09:45 AM

மும்பையில் 59 வயதான இசைக் கலைஞர் ஒருவரை, அவரது வளர்ப்பு மகளின் உதவியுடன், அப்பெண்ணின் காதலன் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

adopted daughter kills her father with the help of boyfriend

மும்பையில் பென்னட் ரெபல்லோ என்கிற மூத்த இசைக்கலைஞரின் ஒருவரின் உடல் துண்டு துண்டுகளாக்கப்பட்டு சூட் கேஸில் வைக்கப்பட்டு மிதி எனும் ஆற்றினில்  விடப்பட்டிருந்தது. மும்பையையே பதைபதைப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, போலீஸார், சூட்கேஸில் இருந்த ஷர்ட்டினை கைப்பற்றினர்.அதை வைத்து, அந்த ஷர்ட்டினை தைத்த டெய்லர் கடைக்குச் சென்று, அந்த ஷர்ட்டுக்கு உண்டானவர்தான் பென்னட் ரெபல்லோ என்கிற இசைக்கலைஞர் என்பதை கண்டுபிடித்து, அவரது வீட்டுக்குச் சென்றபோது அவருடைய வளர்ப்பு மகளான 19 வயது ரிங்கி பற்றி அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். அதை வைத்து அப்பெண்ணை பிடித்து விசாரித்தபோது, தனது தந்தை ஊரில் இல்லை என்று ரிங்கி முதலில் பொய் கூறியுள்ளார்.

அதன் பிறகு போலீஸார் தீவிரமாக விசாரித்ததில் ரிங்கியின் வகுப்பறை நோட்டில், தன் கை பட, ‘அப்பா என்ன மன்னிச்சிருங்க. நான் கெட்டவள். எனக்கு வாழ்வளித்த தந்தையைக் கொல்ல எனக்கு எப்படி மனசு வந்துது? நான் நிக்குறதுக்கு காரணமான என் தந்தையை நான் எப்படி கொன்னேன்.. மன்னிச்சிருங்க.. மன்னிச்சிருங்க.. மன்னிச்சிருங்க அப்பா’ என்று எழுதி வைத்திருந்துள்ளார். ரிங்கி. இதைக் கைப்பற்றிய போலீஸார் ரிங்கியின் கையெழுத்துடன் பொருந்துகிறது என்பதை உறுதிப்படுத்திய பின் ரிங்கியை விசாரித்துள்ளனர்.

அப்போதுதான், தனது வளர்ப்பு தந்தையான பென்னட் ரெபல்லோ தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி, தனது 16 வயதான காதலனுடன் சென்று, தனது தந்தையிடம் கேட்க முயன்றதாகவும், ஆனால் ரிங்கியின் காதலன் சொல்லிக் கொடுத்துதான் ரிங்கி இப்படியெல்லாம் கேட்பதாக சந்தேகித்த பென்னட் ரிங்கியின் காதலனை நெருங்க, அதற்குள் பென்னட்டின் பின்னால் இருந்து பென்னட்டின் தலையில் மூங்கில் கட்டை கொண்டு ரிங்கி ஓங்கி அடித்துள்ளார். யோசிக்காத ரிங்கியின் காதலன் சமையலறையில் இருந்து எடுத்து வந்த கத்தி கொண்டு பலமுறை குத்தியுள்ளான்.

மேலும் மூச்சு இருந்ததால், கொசுவைக் கொல்லும் ஸ்ப்ரே அடித்து கொன்றுள்ளனர். அடுத்த நாள் வீட்டை சுத்தப்படுத்தியதோடு சுத்தியல் கொண்டு பென்னட்டின் பாகங்களை துண்டு துண்டுகளாக்கி சூட் கேஸில் அடைத்து வைத்து, பென்னட்டின் ஷர்ட்டையும் அதில் வைத்து, தலை தனியாகவும் முண்டம் தனியாகவும் முறையே கடலிலும் நதியிலும் வீசியதை ரிங்கி விசாரணையில் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ரிங்கி சிறைக்கும், ரிங்கியின் காதலன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பப் பட்டனர்.

Tags : #MUMBAI #FATHER #DAUGHTER