'அப்பா வேண்டாம்'...'கதறிய மகள்'...'பைக்குள் இருந்து வந்த நாற்றம்'...நடுங்க செய்யும் தந்தையின் செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 10, 2019 03:57 PM

சொந்த மகளை கொலை செய்து, மகளின் உடலை கூறுபோட்டு வீசிய கொடூர தந்தையின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mumbai: Father Kills Girl, Chopped-up Remains Found in Suitcase

தானே மாவட்டம் கல்யாண் ரெயில் நிலையத்திற்குள் இருந்து, நேற்று முன்தினம் அதிகாலையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஆட்டோ ஏறுவதற்காக வந்தார். அங்கிருந்த ஆட்டோவில் ஏறி பிவண்டி பகுதியில் உள்ள கோவா நாக்கா பகுதிக்கு செல்லவேண்டும் என கூறினார். அப்போது அந்த நபர் வைத்திருந்த கருப்பு நிற பையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், பையில் என்ன இருக்கிறது? ஏன் துர்நாற்றம் வீசுகிறது என கேட்டுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த நபர், அங்கிருந்து ஓட்டம் பிடித்து சாலையோரத்தில் பையை வீசி விட்டு சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபர் வீசி சென்ற பையை திறந்து பார்த்தனர். அப்போது அந்த பைக்குள் பாதி அழுகிய நிலையில் தலையில்லாத பெண் உடல் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பெண்ணின் உடலை வீசிச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணின் உடலை வீசிச்சென்றவர் டிட்வாலா இந்திரா நகரில் உள்ள சாய்நகர் சால் பகுதியை சேர்ந்த அரவிந்த் திவாரி(வயது47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அரவிந்த் திவாரி வீசிச் சென்றது அவரது மகளின் உடல் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மகளை கொடூரமாக கொலை செய்தது ஏன் என்பது குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் ''தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும்  திவாரிக்கு 4 பெண் குழந்தைகள். அதில் மூத்த மகளான பிரின்சி தனியார் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரின்சிக்கும் வாலிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் திவாரிக்கு தெரிய வர, அந்த வாலிபர் வேறொரு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மகளின் காதலுக்கு திவாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதையும் மீறி மகள் காதலித்து வந்ததால், கடும் கோபம் அடைந்த திவாரி காதலை கைவிடுமாறு மகளிடம் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் தனது காதலில் பிரின்சி பிடிவாதமாக இருந்ததால் மகளை கொலை செய்ய திவாரி முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று மகளை கோலை செய்ய திவாரி முயற்சிக்க, அப்போது 'வேண்டாம் அப்பா' என பிரின்சி கதறியுள்ளார். ஆனால் அதை கொஞ்சம் கூட கேட்காமல் சொந்த மகள் என்று கூட பாராமல் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி கூறுபோட்டு, ஒரு பகுதி உடலை வீசிச்செல்ல கல்யாண் ரெயில் நிலையத்தில் இருந்து பிவண்டி செல்ல திவாரி முயற்சி செய்து உள்ளார்.

அந்த நேரத்தில் தான் காவல்துறையிடம் திவாரி சிக்கியுள்ளார். மேற்கண்ட தகவலை திவாரி தனது வாக்குமூலத்தில் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இளம்பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் 30 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை, தானே போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் பாராட்டினார்.

வேறு சமூக வாலிபரை காதலித்த மகளை தந்தையே கொலை செய்து உடலை கூறுபோட்டு வீசிய சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #HONOURKILLING #MUMBAI #KILLED #MURDER #SUITCASE #CHOPPED-UP #FATHER