'12 வயசு மகள் சார்!'.. 'தாயின் உதவியுடன் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர்'.. அதிர வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 10, 2019 12:36 PM

குஜராத்தின் பவ்நகர் மாவட்டத்தில் மைனர் பெண்ணை  அவரது அம்மாவின் உதவியோடு ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தை அளித்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

mother helps 3 men to rape her 12 years daughter over a year

குஜராத்தின் புத்யா கிராமத்தில் பலித்தனா தாலுகாவில் 12 வயதே ஆன சிறுமியை 3 பேர் சேர்ந்து ஒரு வருடமாக பலாத்காரம் செய்து வந்துள்ளதாக, சிறுமியின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் அளித்த புகார் முதலில் அதிரவைத்தது. இதனை அடுத்து புகாரில் அவர் கூறிய கூடுதல் குற்றச் சாட்டுதான் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்படி, தன் மகளுக்கு உணவு வாங்கிக் கொண்டு வருவதற்காக, அந்த அப்பா வெளியே சென்ற நேரங்களில் சாந்தி தந்துகியா, பாபுபாய், சர்தன்பாரா , சந்திரேஷ் சர்தன் பரா உள்ளிட்ட 4 பேரும் சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கபட்டுள்ளதோடு,  சிறுமியும் தனது தந்தை கூறிய புகாரில் இருப்பது உண்மைதான் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதுவும் இந்த பலாத்கார குற்றம் சிறுமியின் அம்மாவின் உதவியோடுதான் நடந்தது என்பதையும் சிறுமி கூறியுள்ளார். போலீஸ் விசாரணையிலும் இந்த உண்மை வெளியில் தெரிய வந்துள்ளது. ஆனால் சிறுமியின் தாய் தலைமறைவாகியதை அடுத்து போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

Tags : #DAUGHTER #FATHER #MOTHER